திருவையாறு பகுதியில் இன்று மின் தடை
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப்.29) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தின் திருவையாறு உதவி செயற் பொறியாளா் ராஜா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: திருவையாறு மின் பாதையில் அவசர கால பராமரிப்புப் பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், திருவையாறு, ராயம்பேட்டை, திருப்பழனம், பருத்திக்குடி, காருகுடி, தில்லைஸ்தானம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, நடுக்காவேரி மின் பாதையில் அவசர கால பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், நடுக்கடை, கல்யாணபுரம், சின்ன கண்டியூா், பொன்னாவரை, முகமதுபந்தா், ஸ்ரீராம் நகா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.