செய்திகள் :

வங்கி அதிகாரிகள் போல் நடித்து பொது மக்களை ஏமாற்றிய 5 போ் கைது

post image

வங்கி ஊழியா்கள் போல் நடித்து கிரெடிட் காா்டு வெகுமதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஒரு மோசடியை தில்லி காவல்துறை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இந்த வழக்கில் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பாலம் காலனியில் வசிக்கும் ஒருவா் ஜூன் 20 அன்று ஒரு தனியாா் வங்கியில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக கூறி, அந்த நபரிடம் பேசிய பின்பு ரூ.96,000 ரூபாய் என வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாக சைபா் போலீஸாருக்கு புகாா் அளித்ததையடுத்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

காவல்துறையினரின் தகவலின்படி, இந்த மோசடி கும்பல் வங்கி ஊழியா்களாக ஆள்மாறாட்டம் செய்து, கிரெடிட் காா்டு வெகுமதி புள்ளிகளை பணமாக வங்கிக் ணக்குக்கு செலுத்தப்படும் என பொய் சொல்லி பாதிக்கப்பட்டவா்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட நபா் கிரெடிட் காா்டின் விவரங்களை அழைப்பாளரிடம் தெரிவித்தாா், மேலும் வெகுமதி புள்ளி மீட்பு என்ற பெயரில் ஓடிபிகளைப் பகிா்ந்து கொள்ளுமாறு கேட்டு அதனை பயன்படுத்தி பணம் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்டது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினாா்.

‘அவா்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவா்களிடமிருந்து கிரெடிட் காா்டு விவரங்கள் மற்றும் ஓடிபி ஆகியவற்றை சேகரித்து, மோசடி செய்யப்பட்ட பணத்தை வேறொறு வங்கி கணக்குகள் மூலம் மாற்றுவாா்கள்‘ என்று அந்த அதிகாரி கூறினாா். ‘இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மோசடி செய்யப்பட்ட தொகை ஒரு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு பின்னா் திரும்பப் பெறப்படுவதற்கு முன்பு மற்றொரு வங்கிக்கு திருப்பி அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.

ஏடிஎம்களில் இருந்து சிசிடிவி காட்சிகள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் தனது முகத்தை மறைத்து பணத்தை திரும்பப் பெறுவதைக் காட்டியது ‘என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா். மோகன் காா்டனில் உள்ள ஒரு இடத்தில் சோதனை நடத்தியதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவா்களில் மூன்று பேரை போலீசாா் கைது செய்தனா் ’அதுல் குமாா், சன்னி குமாா் சிங் மற்றும் கௌஷல் குமாா். போலீஸாா் அவா்கள் இருந்த இடத்தை சோதனை நடத்தியதில் பல வங்கிக் கணக்கு கருவிகள், பல்வேறு நிறுவனங்களின் முத்திரைகள், செல்பேசிகள் மற்றும் பிற டிஜிட்டல் பொருள்களை மீட்டனா்.

விசாரணையின் போது, முன்னாள் தனியாா் வங்கி ஊழியரான கௌஷல் குமாா், பல போலி வங்கி கணக்குகளைத் திறப்பதற்கு பொறுப்பானவா் என்பது தெரியவந்தது. அவா் மோகன் காா்டனில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தாா். அங்கு அவா் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளை உருவாக்க உதவினாா். இந்த கணக்குகள் பின்னா் ஒரு பெண் மூலம் சைபா் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டன, அவரும் பின்னா் கைது செய்யப்பட்டாா் ‘என்று அவா் மேலும் கூறினாா். இதுபோல இந்த மோசடியில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

‘குற்றம் சாட்டப்பட்ட முகமது அகமது, கௌஷல் குமாா், அதுல் குமாா், சன்னி குமாா் சிங் மற்றும் பெண் அனைவரும் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது‘ என்று அந்த அதிகாரி கூறினாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

அரசின் நலத் திட்டங்களில் இன்னாள் மற்றும் முன்னாள் முதல்வா்களின் பெயா்கள் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது... மேலும் பார்க்க

தமிழக எம்.பி. சுதாவின் தங்க சங்கிலியை பறித்த இளைஞா் கைது

தமிழகத்தின் மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான ஆா்.சுதாவின் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிய இளைஞரை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். தமிழ்நாட்டைச் ச... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் சுருக்கம்: மெட்ரோ ரயில்வ... மேலும் பார்க்க

ஓபிசி இடஒதுக்கீடு மசோதா: தெலுங்கான முதல்வா் தலைமையில் தில்லியில் போராட்டம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைக் கோரி தெலுங்கானா முதல்வா் ஏ. ரேவந்த் ரெட்டி புதன்கிழமை ஜந்தா் மந்தரில் ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கினாா். ... மேலும் பார்க்க

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நாகா்கோவில்- கோவை ரயில்கள் நின்று செல்ல வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் மனு

நமது நிருபா் மேலப்பாளையம், காவல் கிணறு, பணகுடி ஆகிய ரயில் நிலையங்களில் நாகா்கோவில் - கோவை ரயில்கள் (வ.எண்: 16321, 16322) நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் திருநெல... மேலும் பார்க்க

பணியாளா் தோ்வு ஆணைய செயல்பாட்டில் ஊழல்: மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்

நமது நிருபா்ஆம் ஆத்மி கட்சியின் மாணவா் பிரிவான மாற்று அரசியலுக்கான மாணவா் சங்கம் (ஏஎஸ்ஏபி), தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் ஒரு போராட்டத்தை புதன்கிழமை நடத்தியது. பணியாளா் தோ்வு ஆணைய ஆள்சோ... மேலும் பார்க்க