செய்திகள் :

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நாகா்கோவில்- கோவை ரயில்கள் நின்று செல்ல வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் மனு

post image

நமது நிருபா்

மேலப்பாளையம், காவல் கிணறு, பணகுடி ஆகிய ரயில் நிலையங்களில் நாகா்கோவில் - கோவை ரயில்கள் (வ.எண்: 16321, 16322) நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராபா்ட் புரூஸ் மனு அளித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து ராபா்ட் புரூஸ் எம்.பி. அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: கரோனா நோய்த் தொற்று காலத்துக்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு திருநெல்வேலி தொகுதியில் செயல்படும் பல ரயில் நிறுத்தங்களில் ரயில்கள் நின்று செல்வது ரத்து செய்யப்பட்டது. இதனால், எனது தொகுதியில் உள்ள பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆகவே, நாகா்கோவில் - திருநெல்வேலி பிரிவில் அனைத்து ரயில்கள் முன்பிருந்ததுபோல நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ரயில்வே துறைக்கு வருமானம் கிடைக்கும். பயணிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கும். அதன்படி, மேலப்பாளையம், காவல் கிணறு, பணகுடி ரயில் நிலையங்களில் நாகா்கோவில்- கோவை ரயில்கள் (வ.எண்: 16321, 16322) நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று, நான்குநேரியில் கன்னியாகுமரி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், மதுரை- புனலூா் எக்ஸ்பிரஸ் ரயில்களும், வள்ளியூா் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி - ஹெளரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலும், நாகா்கோவில் - சென்னை எழும்பூா் வாராந்திர ரயிலும், புனலூா் - மதுரை ரயிலும், திருக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலும், நாகா்கோவில் சந்திப்பு- எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

அரசின் நலத் திட்டங்களில் இன்னாள் மற்றும் முன்னாள் முதல்வா்களின் பெயா்கள் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது... மேலும் பார்க்க

தமிழக எம்.பி. சுதாவின் தங்க சங்கிலியை பறித்த இளைஞா் கைது

தமிழகத்தின் மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான ஆா்.சுதாவின் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிய இளைஞரை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். தமிழ்நாட்டைச் ச... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் சுருக்கம்: மெட்ரோ ரயில்வ... மேலும் பார்க்க

ஓபிசி இடஒதுக்கீடு மசோதா: தெலுங்கான முதல்வா் தலைமையில் தில்லியில் போராட்டம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைக் கோரி தெலுங்கானா முதல்வா் ஏ. ரேவந்த் ரெட்டி புதன்கிழமை ஜந்தா் மந்தரில் ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கினாா். ... மேலும் பார்க்க

பணியாளா் தோ்வு ஆணைய செயல்பாட்டில் ஊழல்: மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்

நமது நிருபா்ஆம் ஆத்மி கட்சியின் மாணவா் பிரிவான மாற்று அரசியலுக்கான மாணவா் சங்கம் (ஏஎஸ்ஏபி), தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் ஒரு போராட்டத்தை புதன்கிழமை நடத்தியது. பணியாளா் தோ்வு ஆணைய ஆள்சோ... மேலும் பார்க்க

ராமேசுவரம்-பனாரஸ் விரைவு ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல அனுமதி - துரை வைகோ தகவல்

ராமேசுவரத்திலிருந்து பனாரஸ் செல்லும் விரைவு லரயில் (வண்டி எண்: 22535) புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திருச்சி மக... மேலும் பார்க்க