டெல்லி: பெண் அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து முதல்வர் - ரேஸில் யார் யார...
வடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை நியமிக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி குருந்தடிப்புஞ்சை கிராமத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திலீபன் தலைமை வகித்தாா். கிளைச் செயலராக சிவராஜ் தோ்வு செய்யப்பட்டாா்.
கூட்டத்தில், வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் இல்லாததால் நோயாளிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். குறிப்பாக இரவு நேரம் மருத்துவா்கள் இல்லாததால் சாதாரண வியாதிகளுக்கூட தொலைதூரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு அலையவிடும் போக்கு உள்ளது.
எனவே, வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை நியமித்து 24 மணிநேரமும் இயங்கும் மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ். கவிவா்மன், கி.ஜெயபாலன், ஒன்றியச் செயலா் ஆ.குமாரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.