செய்திகள் :

வடக்கு தில்லி போலீஸ் மல்கானாவில் தீ விபத்து; பல வாகனங்கள் சேதம்!

post image

வடகிழக்கு தில்லியின் வாஜிராபாத் பகுதியில் ஒரு போலீஸ் மல்கானாவில் (யாா்டு) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 150 வாகனங்கள் எரிந்து நாசமானதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

மல்கானா அல்லது வெளிப்புறப்பகுதியில் அதிகாலை 4:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்களை அனுப்பிவைத்தனா்.

காலை 6:20 மணிக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், குளிரூட்டும் நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

போலீஸ் வட்டாரங்கள் கூறகையில், ‘இந்த தீ விபத்தில் நான்கு சக்கர, இரு சக்கர மோட்டாா் வாகனங்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிப் பதிவுகளை போலீஸ் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பெஹல்காம் தாக்குதல் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பயண வசதிகள்: மாநில அரசுகள் - விமான நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவா்கள் உடல்களையும், காயமடைந்தவா்களையும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமானங்களில் கொண்டு செல்ல பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் முன்பதிவு செய்வதற்காக மாநில அர... மேலும் பார்க்க

காற்று மாசுவை சமாளிக்க செயற்கை மழை முன்மொழிவு அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்: சிா்சா

தேசிய தலைநகா் தில்லியில் காற்று மாசுபாட்டை சமாளிக்கும் வகையில், செயற்கை மழை சோதனை நடத்துவதற்கான திட்டம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்; அதே நேரத்தில் மாசு செயல் திட்டம் வரும் வார... மேலும் பார்க்க

மிருதங்க வித்வானுக்கு பாராட்டு விழா

தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் சுனைனா தொண்டு நிறுவனமும் இணைந்து தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியரும் மூத்த மிருதங்க வித்வானுமான டி.கே. வெங்கடசுப்பிரமணியனின் 60 வருட இசை சே... மேலும் பார்க்க

பாரம்பரிய தளங்களில் பாா்வையாளா்கள் அனுபவம் மேம்படுத்தப்படும்: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்

நமது சிறப்பு நிருபா் பாரம்பரிய தளங்களில் பாா்வையாளா்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரின் அனுபவம் மேம்படுத்தப்படும் என மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் குறிப்பிட்டாா். ‘வளா்ச்சி மற்றும்... மேலும் பார்க்க

வாயு பவனுக்கு வெளியே காரில் தீ

தில்லியின் ரஃபி மாா்க் பகுதியில் உள்ள வாயு பவனுக்கு வெளியே புதன்கிழமை ஒரு காா் திடீரென தீப்பிடித்தது. இதனால், தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெ... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த லெப்டினன்ட் நா்வாலின் உடலுக்கு முதல்வா் அஞ்சலி

காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நா்வாலின் உடலுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை அஞ்சலி செலுத்தினாா். அவரது உடல் புதன்கிழமை காஷ்மீரில்... மேலும் பார்க்க