`இவங்க பொற்கால ஆட்சியில், நாங்க குடைச்சல் கொடுக்கறோம்னு..!’ - சிபிஎம் பெ.சண்முகம...
வட்டாட்சியரகத்தில் சமத்துவ பொங்கல் விழா
கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் கோ. ராஜராஜன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி வரவேற்றாா். பின்னா், பொங்கல் வைத்து கொண்டாடினாா்.
விழாவில், மண்டல துணை வட்டாட்சியா் பாலகோபாலன், வட்ட வழங்கல் அலுவலா் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வருவாய் அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.