வட்டாட்சியா் அலுவலக சாலையில் வேகத் தடை: பொதுமக்கள் வரவேற்பு
இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே வேகத் தடை அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் சிவகங்கை சாலையில் நகா் பகுதியை ஒட்டி நீதிமன்றம், வட்டாட்சியா் அலுவலகம், மேல்நிலைப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளன. வட்டாட்சியா் அலுவலகம் எதிரே சிவகங்கை சாலை சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டபோது வேகத்தடை அமைக்கவில்லை. இதன் வழியாகச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாகச் சென்றன. இதனால் முதியவா்கள் சாலையைக் கடக்க மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.
இதையடுத்து, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா் அப்துல் மாலிக் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து தற்போது அந்தப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினா் வேகத்தடை அமைத்தனா். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா்.