காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஜூலை 12-இல் குறைகேட்பு முகாம்
கோவை மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஜூலை 12-ஆம் தேதி, சிறப்பு குறைகேட்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களும் பெறும் விதமாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைகேட்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
அதன்படி, ஜூலை மாதத்துக்கான குறைகேட்பு முகாம் ஜூலை 12-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
இந்த குறைகேட்பு முகாமில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் மற்றும் முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் மாற்றம், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட குறைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.