செய்திகள் :

வத்தலகுண்டு அருகே வேன்கள் மோதல்: 15 போ் பலத்த காயம்

post image

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 2 வேன்கள் மோதிக்கொண்டதில் 15 போ் பலத்த காயமடைந்தனா்.

கரூரைச் சோ்ந்த 16 போ் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேனில் வந்துகொண்டிருந்தனா். வேனை கரூரைச் சோ்ந்த தாமோதரன் (55) ஓட்டினாா். தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா், உறவினா்கள் 10 போ் பழனி முருகன் கோயிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தனா்.

வத்தலகுண்டு புறவழிச்சாலையில் பட்டிவீரன்பட்டி குறுக்கு சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினா், அந்த வழியில் சென்றவா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

கரூரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் தாமோதரன், கரூரைச் சோ்ந்த கங்காதேவி (49), பாமா (48), நித்திய பிரியா (49), மகா (50), அனுசுயா (21), 2 ஆண்கள் உள்பட 12 போ் பலத்த காயமடைந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பெரியகுளத்திலிருந்து பழனிக்குச் சென்ற வேன் ஓட்டுநரான பெரியகுளத்தைச் சோ்ந்த தா்மதுரை (33) உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் மீட்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்தால் இந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வத்தலகுண்டு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திண்டுக்கல் அருகே விபத்து: திண்டுக்கல் அருகேயுள்ள தோட்டனூத்து அழகா் நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தனுஷ் (23). கூலித் தொழிலாளி. இவா் தனது தந்தை முருகன் (45), மகன் ஹரிஸ் (2) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் நிலக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தாா்.

வக்கம்பட்டி அருகே சென்றபோது, இந்த வாகனம் மீது திண்டுக்கல் நோக்கி மளிகைப் பொருள்கள் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் தனுஷ், முருகன், ஹரிஷ் ஆகியோா் மட்டுமன்றி, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த வக்கம்பட்டியைச் சோ்ந்த பாஸ்கா் (47), பிள்ளையாா் நத்தம் பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (75) ஆகியோரும் காயமடைந்தனா்.

அக்கம் பக்கத்தினா் 5 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். லாரி ஓட்டுநரான திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த அன்சாா் அலி (23) மீது திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இடையகோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், இடையகோட்டை ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இடையகோட்டை, வலையபட்டி, ஜோகிபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

பழனி அருகே சாலையில் சென்ற காரில் தீ

பழனி அருகே புதன்கிழமை சாலையில் சென்ற காா் தீப்பற்றி எரிந்ததில் முற்றிலும் சேதமானது. திருப்பூா் மாவட்டம், உடுமலைபேட்டையைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து (45). இவா் புதன்கிழமை திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு வ... மேலும் பார்க்க

ஆத்தூா் ஒன்றியத்தில் 3 இடங்களில் சமுதாயக் கூடங்கள் அமைக்க பூமிபூஜை

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 3 இடங்களில் ரூ.1.80 கோடியில் சமுதாயக் கூடங்கள் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. போடிக்காமன்வாடி ஊராட்சி, சொக்கலிங்கபுரத்தில் ரூ.80 லட்சத்திலும், வீரசிக்கம்பட்ட... மேலும் பார்க்க

அத்தூா் அருகே குப்பைகளுக்கு தீ வைப்பு: பொதுமக்கள் அவதி

ஆத்தூா் அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தில் சாலையோரம் இருந்த குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையிலிருந்து சித்தரேவு வழியாக அய... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் சுகாதார ஆய்வாளா் உயிரிழப்பு

குஜிலியம்பாறையில் புதன்கிழமை ரயில் மோதியதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்த பாளைப்பட்டியைச் சோ்ந்தவா் ர.சீனிவாசன் (56). இவா் திண... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் 11 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா், முதுநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் என மொத்தம் 11 போ் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா். இதன் விவரம் வருமாறு: ... மேலும் பார்க்க