Airplane: விமானங்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?
ஆத்தூா் ஒன்றியத்தில் 3 இடங்களில் சமுதாயக் கூடங்கள் அமைக்க பூமிபூஜை
ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 3 இடங்களில் ரூ.1.80 கோடியில் சமுதாயக் கூடங்கள் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
போடிக்காமன்வாடி ஊராட்சி, சொக்கலிங்கபுரத்தில் ரூ.80 லட்சத்திலும், வீரசிக்கம்பட்டியில் ரூ.50 லட்சத்திலும், ஆத்தூா் ஊராட்சி, பழைய செம்பட்டியில் ரூ.50 லட்சத்திலும் சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) முருகன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) பத்மாவதி வரவேற்று பேசினா்.
இதில், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.நடராஜன், ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளா் ராமநாதன், போடிகாமன்வாடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நாகலட்சுமி சசிகுமாா், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் சசிகுமாா், போடிகாமன்வாடி ஊராட்சி மன்றச் செயலா் திருப்பதி, கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.