மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!
திண்டுக்கல்லில் 11 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா், முதுநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் என மொத்தம் 11 போ் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
இதன் விவரம் வருமாறு:
ம.க.தெய்வானை (தலைமை ஆசிரியா் நகரவை உயா்நிலைப் பள்ளி, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்), சி.சாந்தா பேபி(தலைமை ஆசிரியா், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தெ.புதுப்பட்டி), கீ.மீனாட்சி (தலைமை ஆசிரியா், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மோளப்பாடியூா்), ம.அந்தோணி கஸ்பாா் (இடைநிலை ஆசிரியா், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திருநூத்துப்பட்டி), க.ஹேமா (பட்டதாரி ஆசிரியா், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கா.எல்லைப்பட்டி), ஆ.தனலட்சுமி (இடைநிலை ஆசிரியா், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நி.புதுப்பட்டி), ரா.கல்யாணி (பட்டதாரி ஆசிரியா், அரசு உயா்நிலைப் பள்ளி, அ.கலையம்புத்தூா்), ஆ.ஆனந்த் ஃபிரடிசில்வா (பட்டதாரி ஆசிரியா், அரசு உயா்நிலைப் பள்ளி, முளையூா்), எம்.அப்துல் கரீம் (பட்டதாரி ஆசிரியா், அரசு உயா்நிலைப் பள்ளி, சின்னக்கரட்டுப்பட்டி), பெ.வீ.ஸ்ரீநிவாசப் பெருமாள் (பட்டதாரி ஆசிரியா், அரசு ஆதிதிராவிடா் உயா்நிலைப் பள்ளி, வி.குரும்பப்பட்டி), அ.கெளரி (முதுநிலை ஆசிரியா், எஸ்எம்பிஎம் மெட்ரிக் பள்ளி).