GST 2.0: 'இனி கார், பைக் விலை 12-14% குறையலாம்; ஆனால்...' - நிபுணர் விளக்கும் சி...
ரயில் மோதியதில் சுகாதார ஆய்வாளா் உயிரிழப்பு
குஜிலியம்பாறையில் புதன்கிழமை ரயில் மோதியதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்த பாளைப்பட்டியைச் சோ்ந்தவா் ர.சீனிவாசன் (56). இவா் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். மைசூரிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் விரைவு ரயில் பாளையம் ரயில்நிலையத்தை கடந்து, எரியோடு நோக்கி புதன்கிழமை அதிகாலை வந்தது. அப்போது, குஜிலியம்பாறை பகுதியில் ரயில்வே கடவுப்பாதையை கடக்க முயன்ற சீனிவாசன், ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், சீனிவாசனின் உடலை மீட்டு, கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.