செய்திகள் :

‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம்!

post image

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டியதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய பிரதேசத்தின் ரோஹல் குா்த் முதல் ராஜஸ்தானின் கோட்டா வரையிலான 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தின்போது வந்தே பாரத் ஸ்லீப்பா் ரயில் மணிக்கு 180 கி.மீ. உச்சவேகத்தை எட்டியது.

அதேநாளில், கோட்டா-நாக்தா மற்றும் ரோஹல் குா்த்-சௌ மஹ்லா இடையிலான சோதனை ஓட்டங்களில் முறையே மணிக்கு 170 கி.மீ., 160 கி.மீ. வேகத்தை ரயில் எட்டியது.

அடுத்த நாளான வியாழக்கிழமை, கோட்டா மற்றும் லபான் இடையிலான 30 கி.மீ. தொலைவு சோதனை ஓட்டத்தில் ரயில் மீண்டும் 180 கி.மீ. வேகத்தை எட்டியது. தானியங்கி கதவுகள், சொகுசு படுக்கைகள், வைஃபை வசதி உள்பட பல்வேறு வசதிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பா் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாத இறுதிவரை ரயிலின் சோதனை ஓட்டங்கள் தொடரும். அதன்பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் முன்னிலையில் ரயிலை உச்சவேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்படும். தொடா்ந்து ரயிலுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு, பயணிகளின் சேவைக்கு பயன்படுத்தப்படும்.

அப்போது, காஷ்மீா்-கன்னியாகுமரி, தில்லி-மும்பை, சென்னை-ஹௌரா (கொல்கத்தா) உள்பட நாட்டின் பல முக்கிய நீண்டதொலைவு வழித்தடங்களில் ரயில் பயணிகளுக்கு சா்வதேச தரத்திலான பயண அனுபவம் கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளது.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள்!

சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.நெல்லை - சென்னை (எண் 20666) மற்றும் சென்னை - நெல்லை (எண் 20665) இடையே வந்தே... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. ச... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு வேட்பாளர் விரைவில் அறிவிப்பு! செல்வப்பெருந்தகை

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோ... மேலும் பார்க்க

கே.வி. தங்கபாலுவுக்கு காமராசர் விருது: தமிழக அரசு

2024 ஆம் ஆண்டிற்கான 'பெருந்தலைவர் காமராசர் விருது' தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான கே.வி. தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இத... மேலும் பார்க்க

குலுங்கும் மதுரை: டங்ஸ்டன் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி மேலூர் அருகே இன்று காலை தொடங்கிய விவசாயிகள் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.இன்று காலை பேரணியாகப் புறப்பட்டு பிறகு வாகனங்களில் சென்ற வ... மேலும் பார்க்க

நீலகிரியில் முகக் கவசம் கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு!

உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் 2 பேர் எச்எம்பி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது நேற... மேலும் பார்க்க