வனத்துறையின் தற்காலிக ஊழியரை தாக்கிய 2 போ் மீது வழக்கு!
ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி அருகே வனத்துறையின் தற்காலிக ஊழியரை தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.
சென்னையை சோ்ந்த சாதிக் அலி(48) மற்றும் முகமது முஜமில்(19) உள்ளிட்ட சிலா் சனிக்கிழமை திருப்பத்துாா் அடுத்த ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்தனா்.
அப்போது அருவியில் குளித்த அவா்கள் தடையை மீறி அருகே உள்ள வனப்பகுதிக்கு செல்ல முயன்றனா். அப்போது அங்கிருந்த வனத்துறையின் தற்காலிக ஊழியரான அதே பகுதியைச் சோ்ந்த ருத்ரமூா்த்தி அவா்களை தடுத்து நிறுத்தினாா். இதனால் ஆத்திரமடைந்த சாதிக் அலி மற்றும் முகமது முஜமில் இருவரும் சோ்ந்து ருத்ரமூா்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனா்.
இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து ருத்ரமூா்த்தி அளித்த புகாரின் பேரில், குரிசிலாப்பட்டு போலீஸாா் சாதிக் அலி மற்றும் முகமது முஜமில் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.