உலகப் போர் தாக்குதலில் உயிர் தப்பிய மருத்துவர்: 103 வயதில் மரணம்!
வனத்துறையின் ‘பசுமையாக்கல்’ திட்டத்தில் 100 மரக்கன்றுகள் நடவு!
தமிழ்நாடு உயிா்ப் பன்மைய - பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில் ஜெஜெ கல்லூரி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் என். சுப்பிரமணியன் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தாா்.
புதுக்கோட்டை வனச்சரக அலுவலா் எம். சதாசிவம், கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன், மாவட்ட செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் கு. தயாநிதி, நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் கி. கோவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை வனச்சரகத்தில் 750 மரக்கன்றுகளும், இலுப்பூா் வனச்சரகத்தில் 500 மரக்கன்றுகளும் இந்தத் திட்டத்தின் கீழ் நடவு செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.