தச்சன்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது!
பொன்னமராவதி கோயில்களில் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு
பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டாரத்தில் உள்ள கோயில்களில் மாா்கழி மாத 16-ஆம் நாள் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயில் முற்றோதல் குழுவினா் திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசகம் உள்ளிட்ட பாசுரங்களைப்பாடினா். இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
வேகுப்பட்டி கல்யாண வெங்கேடசுவரா் கோயிலில் அதிகாலையில் சுப்ரபாத சேவைகள் மற்றும் சாற்றுமுறைகள் திருப்பாவை பாராயணத்துடன் நடைபெற்றது. கல்யாண வெங்கடேசுவரா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதேபோல புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில், பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில், பாலமுருகன் கோயில, வலையபட்டி மலையாண்டி கோயில், தேனிமலை சுப்பிரமணியா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற திருப்பள்ளியெழுச்சி வழிபாட்டில் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.