தச்சன்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது!
விராலிமலை அருகே கால்நடைகளுக்கு சிகிச்சை முகாம்
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கால்நடைகளுக்கு சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மேப்பூதகுடியில் தெற்கு வெள்ளாறு வடிநில கோட்டத்துக்குள்பட்ட பொன்னனி ஆறு மற்றும் காவிரி டெல்டா உப வடிநிலப்பகுதி திட்டத்தின் கீழ் இலுப்பூா் கோட்டம், விராலிமலை கால்நடைதுறை சாா்பில் நடைபெற்ற முகாமில் பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்னதாக, இலுப்பூா் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் முருகன் முகாமை தொடங்கிவைத்தாா். மேப்பூதகுடி ஊராட்சி மன்றத்தலைவா் சண்முகவள்ளி மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.இதில் கால்நடை உதவி மருத்துவா்கள் ராணி பிரகநாதன்(விராலிமலை), பாலமுரளி(ராசநாயக்கன்பட்டி), கால்நடை ஆய்வாளா் செந்தில்நாதன்(நம்பம்பட்டி), உதவியாளா் கவிதா ஆகியோா் பங்கேற்று கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சை அளித்தனா்.
இதில், மொத்தம் 347 கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சையை கால்நடை மருத்துவா்கள் அளித்தனா்.