செய்திகள் :

வன்கொடுமை வழக்குக்குப் பிறகு கொல்கத்தா சட்டக் கல்லூரி இன்று திறப்பு!

post image

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திங்கள்கிழமை மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது.

கல்லூரியின் முதலாமாண்டு மாணவி ஒருவர், டி.எம்.சி.யின் மாணவர் பிரிவைச் சேர்ந்த முன்னாள் மாணவர் மற்றும் அவரது இரண்டு மூத்த மாணவர்களால் ஜூன் 25 அன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் ஒரு வாரத்திற்குப் பிறகு கல்லூரி இன்று திறக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா காவல்துறையின் மூத்த அதிகாரிகள் வளாகத்தில் பாதுகாப்பை மேற்பார்வையிட்டனர். தனியார் காவலர்கள் உள்ளே செல்லும் மாணவர்களின் அடையாள அட்டைகளை முழுமையாகச் சரிபார்த்தனர்.

கொல்கத்தா காவல்துறை அனுமதி அளித்ததை அடுத்து, நகரின் கல்லூரி வளாகத்தை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டதாகக் கல்லூரி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கல்லூரியின் மாணவர் சங்க அறை மற்றும் பாதுகாப்புக் காவலர் அறை விசாரணைக்காக போலீசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஜூலை 8 முதல் மாணவர்கள் தங்கள் வழக்கமான வகுப்பு அட்டவணையைப் பின்பற்றுமாறு கல்லூரி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

South Calcutta Law College reopened on Monday amid heavy security after remaining closed for over a week following the gang rape of a student on campus.

சீனாவிடம் உதவி பெற்றோமா? பாகிஸ்தான் ராணுவ தளபதி மறுப்பு

இந்தியா உடனான மோதலின்போது எவ்வித வெளிப்புற உதவிகளையும் பாகிஸ்தான் பெறவில்லை என அந்நாட்டின் ராணுவ தளபதி அஸிம் முனீர் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் கு... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு வழங்குவது சலுகை அல்ல; அடிப்படை உரிமை: ரிஜிஜுவுக்கு ஓவைசி பதில்

சிறுபான்மையினருக்கு அரசு வழங்குவது சலுகை அல்ல; அடிப்படை உரிமை என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவடும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். பெரும்பான்மையினரை விட அதிக ப... மேலும் பார்க்க

தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து: சீனா கடும் அதிருப்தி!

திபெத் விவகாரத்தை சீனா கவனமாக கையாள்வதால் இதில் இந்தியா தலையிடுவதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது சீன அரசு. ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 6) 90-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய தலாய் லாமாவுக்கு பிரதமர் ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு! தஹாவூர் ராணாவின் திடுக்கிடும் வாக்குமூலம்!

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் இடையேயான தொடர்பு குறித்து தஹாவூர் ராணா வாக்குமூலம் அளித்துள்ளார்.2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 16... மேலும் பார்க்க

ஜூலை 9ல் போராட்டங்களில் பங்கேற்கும் ராகுல்: பிகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஜூலை 9ல் பாட்னா செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிகாரில் இந்தாண்டு அக்டோபர்- நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று... மேலும் பார்க்க

18 அடி நீள ராஜ நாகம்.. அசால்டாக பிடித்த கேரள வனத்துறை பெண் காவலர்!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழியை பொய்யாக்கி, 18 அடி நீள ராஜ நாகத்தை, அசால்டாகப் பிடித்துள்ளார் கேரள வனத்துறை பெண் காவலர். அந்தப் புகைப்படங்களைப் பார்த்த மக்கள் சமூக வலைதளத்தில் அவருக்கு பா... மேலும் பார்க்க