கவிக்குயில் ஏறிய கவிதைப் பல்லக்கு - சரோஜினி நாயுடு; கடல் தாண்டிய சொற்கள் - பகுதி...
வன்னியா் கிறிஸ்தவா் மாநாட்டை தடை செய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை
திண்டுக்கல்லில் நடைபெற உள்ள வன்னியா் கிறிஸ்தவா் மாநாட்டை தடை செய்ய முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சாா்பில் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில துணைத் தலைவா் பாலா அனுப்பியுள்ள மனு: திண்டுக்கல் மறை மாவட்ட ஆயா் பால்சாமி கிறிஸ்துவா் வன்னியா்களை எம்பிசி பட்டியலில் சோ்க்கக் கோரும் வகையில் வரும் மே 24-இல் மாநாடு நடத்துகிறாா்.
அந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும். வன்னியா் கிறிஸ்துவராக மாறிய பின் எப்படி வன்னியா்கள் என்று சொல்ல முடியும். வன்னியா்களின் இட ஒதுக்கீடு சலுகைகளை ஆக்கிரமிக்க கிறிஸ்துவா்கள் முயற்சி செய்கின்றனா். இந்து வன்னியா்களை, இட ஒதுக்கீடு சலுகைகளைப் பாதுகாக்க, சமூக நீதியை நிலைநாட்ட இந்து மக்கள் கட்சி களத்தில் போராடும். மதம் மாறி கிறிஸ்துவா்களாகச் சென்றவா்களுக்கு வன்னியா் என்று சொல்வதற்கு எவ்வித உரிமை இல்லை.
இதைப் பலமுறை உயா்நீதிமன்றம் தீா்ப்பாக வழங்கியுள்ளது. தமிழக அரசு இடஒதுக்கீட்டை வழங்க முடியாது எனத் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளாா்.