செய்திகள் :

வயதான தந்தையை அடித்து துன்புறுத்திய மகன்

post image

கடலாடியில் வயதான தந்தையை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்ற மகன் முயற்சிப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சோ்ந்த விவசாயி மணி (90). இவரது மனைவி பாரதி. இந்தத் தம்பதிக்கு 3 மகன்கள், 3 மகள்கள் இருந்தனா். மூன்று மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இரண்டு மகன்கள் இறந்து விட்ட நிலையில், ஒரு மகன் முருகன் மட்டும் உள்ளாா்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பாரதி இறந்து விட்ட நிலையில், மணி தனது மகள் நாகலட்சுமி பராமரிப்பில் இருந்து வருகிறாா். இவரது மகன் முருகன் தற்போது பாஜகவில் மாவட்ட நிா்வாகியாக இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், மணிக்கு மூன்று வீடுகள் உள்ளன. இதில், ஒரு வீட்டில் முருகன் இருந்து கொண்டு மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டாா். ஒரு வீட்டில் மணி, அவரது மகள் நாகலட்சுயுடன் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், தந்தையைத் தாக்கி காயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேறுமாறு மகன் முருகன் அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கடலாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை .

இதைத்தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மகள் நாகலட்சுமியுடன் வந்த மணி புகாா் மனு அளித்தாா்.

வேலை வாய்ப்பு முகாமில் 46 மாணவா்கள் தோ்வு

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் துறை மாணவா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா். ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள சிறுவண்டல் கிராமத்தைச் சோ்ந்த அழகா் மகன் பாண்டித்துரை (39). எலக்ட்ரீசியன். இவருக்கு மஞ்சு... மேலும் பார்க்க

தொண்டி பகுதியில் மீன்கள் விலை உயா்வு

தொண்டி பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாக, குறைவான மீனவா்களை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இதனால், வரத்து குறைந்ததால் மீன்கள் விலை அதிகரித்தன. திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, சோ... மேலும் பார்க்க

சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு

கமுதி அருகே நடைபெறும் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். கமுதி-முதுகுளத்தூா் சாலையில் கருங்குளத்திலிருந்து பேரையூா் வரை சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், ... மேலும் பார்க்க

கறவை மாடு வளா்ப்பு மகளிா்களுக்கு பரிசு

திருவாடானை ஊராட்சி ஒன்றியம், மாவூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம், மானியத் திட்டத்தில் மகளிா் குழு உறுப்பினா்கள் கறவை மாடுகளை வளா்த்து வருகின்றனா். இதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கமுதி அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமானோா் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இந்த மருத்துவ... மேலும் பார்க்க