செய்திகள் :

வயநாடு: ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்த பரிதாபம்; வனத்துறையின் பதில் என்ன?

post image

வனப்பரப்பும் வனவிலங்குகளும் நிறைந்த கேரள மாநிலத்தின் வயநாட்டில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்களும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளின் காரணமாக வனவிலங்குகள் தங்களின் வாழிடச் சூழலை இழக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது.

தனியார் காப்பி தோட்டத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராதா என்ற பெண்ணைப் புலி தாக்கி கொன்றதுடன் அவரின் உடல் பாகங்களையும் தின்றது. தொடர்ந்து அந்த புலியைத் தேடி வந்த நிலையில், வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டில் தப்பிய அந்த புலி குடியிருப்பு அருகில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், குறிச்சியாடு பகுதியில் இரண்டு புலிகள் உயிரிழந்து கிடப்பதைக் கண்டறிந்துள்ளனர். மேலும், அருகில் உள்ள தனியார் காப்பி தோட்டத்தில் மற்றொரு புலி ஒன்றும் அழுகிய நிலையில் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட அளவில் விசாரணை நடத்த வனத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது அறிக்கையைச் சமர்ப்பித்ததுள்ளனர்.

இது குறித்துத் தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரிகள், "குட்டிகளைக் கொண்ட பெண் புலிகள் இனச்சேர்க்கை காலத்தில் ஆண் புலிகளிடம் விலகியே இருப்பது இயல்பு. அந்த சமயத்தில் ஆண் புலிகள் கடுமையான கோபத்தில் இருக்கும். அந்த கோபத்தைக் குட்டிகளிடம் காட்டும்.

உயிரிழந்த புலி

உயிரிழந்த புலிக் குட்டிகளின் கழுத்து மற்றும் உடலில் மற்றொரு புலியின் தாக்குதலால் காயங்கள் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் தெரிகின்றன. புலி கடித்த அடையாளங்களும் உடற்கூறாய்வின்போது காணப்பட்டன. மற்றொரு புலியின் தாக்குதலாலேயே இந்த 3 புலிகளின் இறப்பும் ஏற்பட்டுள்ளது" என விசாரணையை முடித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

1 கி.மீக்கு 50 பைசா தான் செலவு - கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜன் வாகனம்

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ரெநியூ’ (ReNew) என்ற மாணவர் குழு உள்ளது. இவர்கள் கத்தார் நாட்டில் நடைபெற உள்ள 'ஷெல் இக்கோ-மாரத்தான் - ஆசியா பசிபிக் 2025' எனும் சர்வதேச அளவிலான போட்டியில் இந்த... மேலும் பார்க்க

கோத்தகிரி: குப்பைக் குவியலில் உணவு தேடி அலையும் கரடிகள்... தொடரும் அவலம்!

வனங்களும் வனவிலங்குகளும் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் கழிவு மேலாண்மை என்பது மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் முறையின்றி கொட்டப்படும் காய்கறி , இறைச்சி உள்ளிட்ட உணவு கழிவுகளால... மேலும் பார்க்க

பந்திப்பூர்: காய்கறி லாரிகள் மட்டும் டார்கெட்; தெறிக்கும் ஓட்டுநர்கள், திணறும் வனத்துறை

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் மிக முக்கிய அங்கமாக இருக்கின்றன முதுமலை முச்சந்திப்பு வனப்பகுதிகள். தமிழ்நாட்டின் முதுமலை, சத்தியமங்கலம், கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய புலிகள் காப்பகங்கள், கேரளாவின்... மேலும் பார்க்க

Elephants: மகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்; மருமகளை ஏற்றுக்கொள்ளாது; தாய்மாமனுக்குப் பெண் கொடுக்காது

''நீரோடையில் ஒரு யானைக்குடும்பம் நீர் அருந்திக்கொண்டிருந்தது. யானைகளை, யானைக்கூட்டம் என்று சொல்லக்கூடாது. 'யானைக்குடும்பம்' என்பதுதான் சரியான வார்த்தை. நீர் அருந்திவிட்டு மேலேறும்போது அந்தக் குடும்பத்... மேலும் பார்க்க

சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரத்தில் இரை தேடி குவிந்த பறவைகள்! | Album

இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி... மேலும் பார்க்க

சென்னை: கரை ஒதுங்கிய 1,000 பங்குனி ஆமைகள்; `மீன் வளம் குறையும் அபாயம்' - சூழலியலாளர்கள் கவலை!

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 1000 ஆலிவ் ரிட்லி ஆமைகள் சென்னை கடற்கரையில் கரை ஒதுங்கியிருக்கின்றன. பாதுகாக்கப்பட்ட இனமான ரிட்லி ஆமைகள் மொத்தமாக உயிரிழப்பது சூழலியல் செயற்பாட்டாளர்கள் மத்தியி... மேலும் பார்க்க