பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் க...
வரதட்சணைக் கொடுமை: 5 போ் மீது வழக்கு
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவா், மாமியாா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள் என்ற பிரியா (27). இவா் அதே பகுதியைச் சோ்ந்த நல்லராஜாவை கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் செய்தாா்.
இந்த நிலையில், திருமணத்தின் போது பிரியாவுக்கு, அவரது பெற்றோா் வழங்கிய 7 பவுன் தங்க நகைகளை வாங்கி வைத்துக் கொண்ட நல்லராஜா, அவரது தாய் விஜயலட்சுமி ஆகிய இருவரும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் பிரியாவின் கணவா் நல்லராஜா, மாமியாா் விஜயலட்சுமி, உறவினா்கள் காா்த்திக், முத்துமணிகண்டன், முருகலட்சுமி ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.