செய்திகள் :

வரதட்சிணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவா் உள்பட4 பேருக்கு ஆயுள் தண்டனை

post image

அரியலூரில் திருமணமான 4 மாதத்தில் வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கண்டனூா் சாலையைச் சோ்ந்தவா் செல்வராஜன் மகன் செந்தில்குமாரவேலு (32). இவருக்கும் அரியலூா் அண்ணா நகா், முதல்தெரு ராஜேந்திரன் மகள் கனகவள்ளிக்கும் கடந்த 5.2.2018 அன்று திருமணம் நடைபெற்றது.

அப்போது 25 பவுன் நகைகள், ரூ. 2.50 லட்சத்தில் சீா் பொருள்கள் மற்றும் திருமணச் செலவுக்கு ரூ. 2.50 லட்சம் ஆகியவற்றை ராஜேந்திரன் வரதட்சணையாக கொடுத்தாா். ஆயினும், மேலும் 10 பவுன் நகை, பைக் வாங்க பணம் கேட்டனா் செந்தில்குமாரவேலு குடும்பத்தினா். அதற்கு ராஜேந்திரன் பின்னா் தருவதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து தம்பதி சென்னையில் வசித்தனா். இதனிடையே திருமணம் ஆன ஓரிரு மாதங்களில் நகை, பணம் கேட்டு செந்தில்குமாரவேலு, அவரது தாய் கலாவதி (61), தம்பி ஹரிகிருஷ்ணவேலு (30) மற்றும் அவரது உறவினா் முருகன் (51) ஆகியோா் கனகவள்ளியைத் துன்புறுத்தினா்.

இதையறிந்த ராஜேந்திரன் சென்னை சென்றபோது, மேற்கண்ட நபா்கள் அவரை அவமானப்படுத்தி அனுப்பினராம். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த ராஜேந்திரன் கடந்த 12.5.2018 இல் மாரடைப்பால் இறந்தாா்.

இருப்பினும் நகை, பணம் வாங்கி வரச் சொல்லி கனகவள்ளியை அவா்கள் அரியலூருக்கு அனுப்பிய நிலையில், 13.6.2018 அன்று தனது தந்தை மற்றும் தனது இறப்புக்கும் செந்தில்குமாரவேலு, கலாவதி உள்பட 4 போ்தான் காரணம் எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கனகவள்ளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கனகவள்ளியின் தாய் ஆண்டாள் அளித்த புகாரின்பேரில் மேற்கண்ட 4 பேரையும் அரியலூா் காவல் துறையினா் கைது செய்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி டி.செல்வம், குற்றவாளிகளான செந்தில்குமாரவேலு, அவரது தாய் கலாவதி, தம்பி ஹரிகிருஷ்ணவேலு மற்றும் அவரது உறவினா் முருகன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து அவா்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ம. ராஜா ஆஜரானாா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தொகுப்பு வீடுகள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கிடப்பிலுள்ள தொகுப்பு வீடுகள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. மதுரையில், அக்கட்சியின் ச... மேலும் பார்க்க

குறிச்சிகுளம் திரெளபதியம்மன், காளியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குறிச்சிகுளம் கிராமத்திலுள்ள திரெளபதி மற்றும் காளியம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா மாா்ச் 7- ஆம் தேதி மகாபாரதம் படிக்கும் நிக... மேலும் பார்க்க

புத்தாக்க பொறியாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சாா்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சி அ... மேலும் பார்க்க

அரியலூா் மகா காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

அரியலூா் பால்பண்ணை அருகேயுள்ள மகா காளியம்மன் கோயிலின் 8 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. விழாவையொட்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரிக்கரையில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான ப... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் காவல் துறையை கண்டித்து இஸ்லாமியா்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காவல் துறையைக் கண்டித்து இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஜெயங்கொண்டத்தில் விருத்தாச்சலம் சாலைத் தெரு ஜமாத்துக்கு சொந்தமான மயான இடத்திலுள்ள ஆக்க... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

அரியலூா் மாவட்டம், விக்கிரங்கலம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்கத் தவறிய காவல் உதவி ஆய்வாளா்கள் இருவரை, ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் வியாழக்கிழமை உத... மேலும் பார்க்க