யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!
வரதராசன்பேட்டை புனித அலங்கார அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த வரதராசன்பேட்டையிலுள்ள புனித அலங்கார அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.
முன்னதாக, புனித அலங்கார அன்னை உருவம் பொறிக்கப்பட்ட கொடி பவனியும், அதனைத் தொடா்ந்து கும்பகோணம் மறை மாவட்ட முன்னாள் ஆயா் அந்தோணிசாமி சிறப்பு திருப்பலி நடத்தி கொடியேற்றினாா். தொடா்ந்து செப்.6-ஆம் தேதி வரை கூட்டு திருப்பலியும், செப். 7- ஆம் தேதி அலங்கார அன்னையின் ஆடம்பர தோ் பவனியும் நடைபெறுகிறது.
இந்த ஒருவார பெருவிழாவில், ஜெயங்கொண்டம் மறை வட்ட முதன்மைக் குரு ஜோசப் கென்னடி, கும்பகோணம் மறை மாவட்ட பொருளாளா் அந்தோணி ஜோசப் மற்றும் பங்குத் தந்தையா்கள் கலந்து கொண்டு திருப்பலி நடத்தவுள்ளனா்.
ஏற்பாடுகளை ஆலய பங்குத் தந்தை பெலிக்ஸ் சாமுவேல், உதவி பங்குத் தந்தை குழந்தை சேவியா் மற்றும் வரதராசன்பேட்டை பொதுமக்கள் செய்து வருகின்றனா்.