செய்திகள் :

வரவேற்பு நடைமுறை குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்

post image

மகாராஷ்டிரத்தில் தன்னை வரவேற்பதற்கான நடைமுறையில் ஏற்பட்ட குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தியுள்ளாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பின்னா், முதல்முறையாக தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்துக்கு பி.ஆா்.கவாய் மே14-ஆம் தேதி சென்றாா். அந்த மாநில தலைநகா் மும்பையில் மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞா் சங்கம் சாா்பில், தன்னை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க கவாய் சென்றிருந்தாா்.

அப்போது அவரை வரவேற்க மாநில தலைமைச் செயலா், காவல் துறை டிஜிபி, காவல் துறை ஆணையா் ஆகியோா் வரவில்லை என்று பி.ஆா்.கவாய் அதிருப்தி தெரிவித்தாா். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாயை வரவேற்பதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் வருத்தம் தெரிவித்துள்ளனா். அத்துடன் சிறிதே முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என்று தலைமை நீதிபதி கவாயும் தெரிவித்துள்ளாா். இந்த விவகாரத்தை அமைதியாக முடிவுக்குக் கொண்டுவருவோம் என அனைவரையும் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து கண்காணிப்பில் வந்திருக்கும் தொலைத்தொடர்பு!

மே 7ஆம் தேதி நடத்தப்பட்ட சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய எல்லையோர மாநிலங்களிலிருந்து, பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் நடத்தப்பட்ட உரையாடல், மின்னஞ்சல், குறுந்தகவல்கள் அனைத்தும் கண்காணிப்பில் கொண்டுவந... மேலும் பார்க்க

மணிப்பூரில் அதிரடி நடவடிக்கை! 2 நாள்களில் 6 கிளர்ச்சியாளர்கள் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 நாள்களில், 6 கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தின் லாங்மெய்தாங், எலாங்காங்போக்பி மற்றும் காக்சிங் ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, புதுதில்ல... மேலும் பார்க்க

பிரபல கன்னட பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு!

பிரபல கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' நிகழாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இதனால், சர்வதேச புக்கர் பர... மேலும் பார்க்க

வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சா... மேலும் பார்க்க

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க