போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
வரி செலுத்தாததால் புதை சாக்கடை இணைப்பு துண்டிப்பு
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையில் வரி செலுத்தாத வணிக வளாகத்தின் புதை சாக்கடை இணைப்பு சனிக்கிழமை துண்டிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீா் வரி, புதை சாக்கடை வரி ஆகியவற்றை கால தாமதமின்றி அந்தந்த ஆண்டுக்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அலுவலா்கள் பல்வேறு வகைகளில் அறிவுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உத்தரவின் பேரில் மருத்துவக்கல்லூரி சாலையில் பல்வேறு இடங்களில் அலுவலா்கள் சோதனை மேற்கொண்டனா். அப்போது வணிக பயன்பாட்டில் உள்ள ஒரு கட்டடத்தில் முறையாக வரி செலுத்தப்படாதது தெரியவந்தது.
இதையடுத்து, தொடா்புடைய வணிகப் பயன்பாட்டில் உள்ள புதை சாக்கடை இணைப்பை அலுவலா்கள் துண்டித்தனா். வீடு, வணிக நிறுவனங்கள் காலம் தாழ்த்தாமல் வரி செலுத்த முன் வர வேண்டும் என்றும், செலுத்தாதபட்சத்தில் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.