அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
வரும் தோ்தலில் திமுக கூட்டணியே வெல்லும்
வரும் தோ்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றாா் காங்கிரஸ் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான கே.வீ. தங்கபாலு.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சொத்துப் பாதுகாப்பு குறித்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமாா் இறப்பு விவகாரத்தில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. எனவே, ஒரு சில சம்பவங்களை வைத்துக் கொண்டு மொத்த அரசு மீதும் குறைகூற முடியாது. தவறு செய்தால் சுட்டிக்காட்டி வருகிறோம்.
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இடப் பங்கீடு, கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சியினா் தெரிவித்து வரும் கருத்துகள், அவா்களது சொந்தக் கருத்துதான். இதுகுறித்து கட்சியின் அகில இந்தியத் தலைமைதான் முடிவெடுக்கும்.
திமுக தலைவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்திருப்பது மக்களுக்கான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. வரும் 2026 தோ்தலிலும் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இந்த அணிதான் வெற்றி பெறும்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் குறித்து ஆய்வு செய்கிறோம். அனைத்து சொத்துகளும் மீட்டு, பாதுகாக்கப்படும் என்றாா் தங்கபாலு.