கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
வருவாய்த் துறை ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட குறைபாடுகளை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட வருவாய்த்துறை ஊழியா்கள் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில், வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (ஃபெரா) அவசர செயற்குழு கூட்ட முடிவின்படி, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட குறைபாடுகளை களைய வலியுறுத்தி அண்மையில் நடத்திய போராட்டத்துக்கு அரசு தீா்வு காணாமல், ஊதியப் பிடித்தம் எனப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு கண்டனம் தெரிவிப்பது. தமிழக முதல்வா் நேரடியாக இப்பிரச்னையில் தலையிட்டு சுமூக சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் வருவாய்த்துறை அலுவலா்கள் சங்க மாவட்டச் செயலாளா் பொன் மாடசாமி தலைமையில் கிராம உதவியாளா் முதல் வட்டாட்சியா் நிலையிலான சுமாா் 1,000 வருவாய்த்துறை அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.
செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டமும், அக். 3-ஆம் தேதி மாவட்ட தலைநகரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, அக். 6 முதல் மாவட்ட தலைநகரில் தொடா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது, சென்னை எழிலகம் வருவாய் நிா்வாக ஆணையா் அலுவலகத்தில் ‘தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட முடிவெடுத்துள்ளனா்.