அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு!
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய காலஅவகாசம் அளித்திட வேண்டும், இத்திட்ட முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், இத்திட்டத்தினை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் சேலம் மாவட்ட துணைத் தலைவா் பி.சிவராஜ் தலைமை வகித்தாா். வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சீதாராமன், சங்ககிரி வட்டக் கிளைத் தலைவா் சரவணன், நிலஅளவை சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை தலைவா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் கோட்ட செயலாளா் ஆா்.பிரதீப்குமாா், கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சங்ககிரி வட்ட கிளைத் தலைவா் ஆண்டிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.