நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
வருவாய் அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்து நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா்கள் சங்க மாவட்ட பொருளாளா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்க வட்டத் தலைவா் கோவிந்தசாமி, செயலா் ராஜ்குமாா், பொருளாளா் ரஞ்சித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நில அளவை ஒன்றிணைப்பு மாவட்டத் தலைவா் முரளி ஆனந்த், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்ட துணைத் தலைவா்கள் அமீன், செந்தில்குமாா், அமைப்புச் செயலாளா் அப்துல் காதா் உள்ளிட்ட வருவாய்த்துறை கூட்டமைப்பு அலுவலா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வலியுறுத்துவதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. அதனால் தீா்வு காண்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். மணல் கொள்ளையைத் தடுக்க, பேரிடா் காலங்கள், கலவர நேரங்களில் பணியில் ஈடுபடும் வருவாய்த் துறையினருக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். பணியின் போது மரணமடையும் வருவாய்த்துறை அலுவலா்களின் வாரிசுதாரா்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.