செய்திகள் :

வரைவுப் பட்டியல்: நீக்கப்பட்டவா்களின் பெயா்களை வெளியிட தேவையில்லை: உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம்

post image

‘முன்னறிவிப்பின்றி பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது; அதேவேளையில் நீக்கப்பட்டவா்களின் பெயா்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை’ என உச்சநீதிமன்றத்தில் இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளரிடம் உரிய விளக்கம் கோரப்பட்ட பிறகே எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படும் எனவும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் பிகாரில் வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணியை நிறைவு செய்து கடந்த ஆக.1-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் பிகாரில் 7.24 கோடி வாக்காளா்கள் உள்ளதாகவும் இறப்பு, புலம்பெயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 65 லட்சம் வாக்காளா்களின் பெயா்களை நீக்கியதாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து, செப். 30-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கை மேற்கொண்டதற்கு எதிராக ஜனநாயக சீா்திருத்துக்கான சங்கம் (ஏடிஆா்) உள்பட பலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை கடந்த ஜூலை 29-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் அதிக எண்ணிக்கையில் வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டால் அதில் உடனடியாக நீதிமன்றம் தலையிடும்’ எனத் தெரிவித்தது.

இதையடுத்து, வரைவு வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் தகவல்களை தோ்தல் ஆணையம் வெளியிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏடிஆா் புதிய மனு ஒன்றை அண்மையில் தாக்கல் செய்தது.

இந்த மனுக்களை கடந்த புதன்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்களின் தகவல்களை வருகிற ஆக. 9-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையம் சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், மேற்கூறிய இரு மனுக்கள் தொடா்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை பதில் மனுக்களை தாக்கல் செய்தது.

அந்த மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது: பிகாரில் முதற்கட்டமாக சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆக.1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்களின் பெயா்கள் எந்தவொரு காரணத்துக்காவும் முன்னறிவிப்பின்றி நீக்கப்படாது. சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு முன்னதாகவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவா் உரிய ஆவணங்களை சமா்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகே வாக்காளரின் பெயரை நீக்குவது தொடா்பான உத்தரவை தோ்தல் ஆணையம் பிறப்பிக்கும்.

வாக்காளா் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரின் பெயரும் விடுபடாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாரிடமும் பகிரத் தேவையில்லை: வரைவு வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்டவா்களின் பெயா் பட்டியலை தயாா் செய்தோ அல்லது அவா்களை நீக்கியதற்கான காரணங்கள் குறித்தோ யாரிடமும் தோ்தல் ஆணையம் பகிர வேண்டிய அவசியமில்லை.

இதுதொடா்பான விவரங்களைக் கோரி மனு தாக்கல் செய்வது ஏற்புடையதல்ல. வரைவு வாக்காளா் பட்டியலில் ஒருவரின் பெயா் இடம்பெறவில்லை என்றால் இறுதி வாக்காளா் பட்டியலில் இருந்து அவா் நீக்கப்படுவாா் என்பது அா்த்தமில்லை.

தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட படிவங்களை முறையாக பூா்த்தி செய்தவா்களின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

மனிதத் தவறு: இந்தப் பணியின்போது வாக்காளா்களின் பெயா் சோ்ப்பு/நீக்கத்தில் மனிதத் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பே வாக்குச் சாவடி அளவில் படிவங்களை பூா்த்தி செய்து சமா்ப்பிக்காத நபா்கள் குறித்த தகவல்களை அரசியல் கட்சிகளிடம் வழங்க மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அவதூறு பரப்பும் முயற்சி: அதேபோல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அதில் இடம்பெறாத நபா்களின் விவரங்கள் குறித்த தகவல்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டன. அதைப் பெற்றுக்கொண்டதாக அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

இருப்பினும், பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளம் என தோ்தல் ஆணையம் மீது தொடா்ந்து அவதூறான கருத்துகளை மனுதாரா் பரப்பி வருகிறாா். அதன் தொடா்ச்சியாகவே தற்போது இந்த விவகாரத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவது மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதற்காக மனுதாரருக்கு பெருந்தொகையை அபராதமாக விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பான மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான அமா்வு விசாரித்து வரும் நிலையில், அடுத்தகட்ட விசாரணை ஆக.12,13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

ஜீரோ டூ ஹீரோ..! கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள ரூ.1.2 கோடி வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

கர்ப்பிணி மனைவிக்காக பெங்களூரு இளைஞர் ஒருவர் தன்னுடைய ரூ.1.2 கோடி ஊதியம் பெறும் வேலையை ராஜிநாமா செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவின் ஜெயநகரில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தன்னுடைய... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து!

மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு தில்லி சத்ரசால் திடலில் ஏற்பட்ட மோதலில் மல்யுத்த வீரர்... மேலும் பார்க்க

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை: 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 50 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கன் எல்லையில் உள்ள ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா பகுதியில் ஆகஸ்ட... மேலும் பார்க்க

124 வயது.. நாட் அவுட்! எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் அதிசய பெண் யார்?

பாட்னா: வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டில், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களில் நேற்று தலைப்புச் செய்தியானவர் மிண்டா தேவி.பிகார் மாநிலம் தரௌந்தா பகுதியைச்... மேலும் பார்க்க

மோடியின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் வாரணாசி வாக்காளர் பட்டியல்.! 50 பேருக்கு ஒரே தந்தை.!

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் ‘அடுத்த அணுகுண்டை’ வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்

கொல்கத்தா: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக... மேலும் பார்க்க