காலிஸ்தான் குடியரசு? கனடாவில் திறக்கப்பட்ட தூதரகத்தால் பரபரப்பு!
வறுமையும் ஆஞ்சநேயரும்... திரையரங்குகளில் வெளியானது நாகேஷ் பேரனின் வானரன்!
நடிகர் நாகேஷின் பேரனான பிஜேஷ் நாகேஷ் நடித்துள்ள வானரன் திரைப்படம் இன்றுமுதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான கலைஞர்களில் மறைந்த நடிகர் நாகேஷும் ஒருவராக அறியப்படுகிறார். இவரது பேரன் பிஜேஷ் நாகேஷ் வானரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஆஞ்சநேயர் வேடமிட்டு வீதி வீதியாகச் சென்று காணிக்கை பெற்று வாழ்க்கையை நடத்துபவராக இருக்கிறார்.
இந்தப் படத்தில் வறுமையுடன் தன் மகளுக்காக நடக்கும் உணர்வுப் பூர்வமான காட்சிகளில் பிஜேஷ் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது.
ஆரஞ்சு பிக்சர்ஸ் தயாரிப்பில் ஸ்ரீராம் பத்மநாபன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் அக்ஷயா, லொல்லுசபா நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
இந்தப்பட பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இதில் பாடலாசிரியர் செந்தமிழ் எழுதியுள்ள “நீதானே என் உலகம் ” என்ற அப்பா மகள் பாச உறவு குறித்தான பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
“இறைவனின் நகலாக கிடைச்சவளே இலையுதிர் காலத்திலே முளைச்சவளே, சாபத்தை வரமாக்க பிறந்தவளே” என்ற உருக்கமான வரிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இப்படத்தின் முழுப்பாடல்களையும் செந்தமிழ் சீனிவாசன் எழுத, இசையமைபாளர் ஷாஜகான் இசையமைத்துள்ளார் .இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றுவருகிறது.