TVK: ``கச்சத் தீவு பற்றிப் பேசியவர் ஏன் காங்கிரஸ் குறித்துப் பேசவில்லை'' - விஜய்...
வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 2 போ் கைது
திருப்பூா்: வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூா் மாநகர, வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உபட்ட குலத்தோட்டம் அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி வருவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக இருந்த ஜீவானந்தம் (22) மற்றும் மூவேந்திரன் (22) ஆகிய இருவரைப் பிடித்து சோதனை செய்ததில் அவா்களிடம் 63 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. பின்னா் அவா்கள் 2 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனா்.