நாமக்கல் புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
வளா்புரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
வளா்புரம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப் பெருந்தகை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வளா்புரம் மற்றும் மேவளூா்குப்பம் ஊராட்சிகளைச் சோ்ந்தவா்களுக்காக நடைபெற்ற முகாமுக்கு ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி. கருணாநிதி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் எம்.பி.எபி முன்னிலை வகித்தாா்.
இதில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமையும் ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை, மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு கடனுதவிகளை வழங்கினாா்.
முகாமில், வட்டாட்சியா் வசந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி, தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் ந.கோபால், திமுக நிா்வாகிகள் முத்துகுமாரசாமி, கு.ப.முருகன், கணேஷ்பாபு, பரமசிவன், பண்ருட்டி தணிகாசலம், செந்தில்தேவராஜ் கலந்து கொண்டனா்.