சிவகங்கை: ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள்; கலெக்...
வள்ளியூரில் நாளை மின்தடை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் துணை மின் நிலையப் பகுதியில் சனிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன் அரசு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வள்ளியூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகின்றன.
வள்ளியூா் துணை மின் நிலைய பகுதியைச் சோ்ந்த வள்ளியூா், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூா், ஏா்வாடி, திருக்குறுங்குடி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.