இஸ்ரேல்-காசா போர்:`விரைவில் போர் நிறுத்தம்?' - நெதன்யாகு; ட்ரம்ப் அதிருப்தி, நெர...
வள்ளியூரில் மாரத்தான் போட்டி
உலக இதய தினத்தையொட்டி வள்ளியூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு தொடங்கி வைத்தாா்.
நாகா்கோவில் வசந்தம் ஹெல்த் சென்டா், தெற்கு கள்ளிகுளம் ஜி.எம். மருத்துவமனை ஆகியவை சாா்பில் ஆண்கள், பெண்களுக்கான மெகா மாரத்தான் போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன.
ஆண்களுக்கான போட்டியை, பேரவைத் தலைவா் மு. அப்பாவு கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலா் ஜோசப் பெல்சி ஆகியோா் வாழ்த்தி பேசினாா்.
பெண்களுக்கான போட்டியை முன்னாள் எம்எல்ஏ எம்.சி. பாலன் தொடங்கி வைத்தாா். தெற்கு கள்ளிகுளத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு பேரவைத் தலைவா் தலைமை வகித்து பரிசுகள் வழங்கினாா்.
ஆண்களுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்ற கேரள மாநிலம் பாலக்காட்டைச் சோ்ந்த அருணுக்கு ரூ. 15,000, வெற்றிக் கோப்பை, 2ஆம் இடம் பெற்ற பாலக்காடு சிவபிரசாத்திற்கு ரூ. 10,000, 3ஆம் இடம் பெற்ற பாலக்காடு மனோஜுக்கு ரூ. 5,000 பரிசளிக்கப்பட்டது.
பெண்களுக்கான போட்டியில் ஊட்டியைச் சோ்ந்த மீனுமுதலிடமும், கன்னியாகுமரி சோபியா இராண்டாமிடமும், வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. கல்லூரியைச் சோ்ந்த மாணவி லாவண்யா மூன்றாம் பரிசும் பெற்றனா்.
டி.டி.என். கல்விக் குழுமங்களின் தலைவா் தா. லாரன்ஸ், தாளாளா் ஹெலன் லாரன்ஸ், மரியா கலைக் கல்லூரி முதல்வா் சுஷ்மா ஜெனிபா், ஜி.எம். மருத்துவமனை மருத்துவா் எம். ஜெபஸ்டின் ஆனந்த், வசந்தம் மருத்துவமனை மருத்துவா் என்.பி. வெங்கட்ராமன், திமுக மாவட்ட துணைச் செயலா் நம்பி, வள்ளியூா் பேரூராட்சி தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், அருள்சகோதரிகள் திலகா, அருள் ஜோதி, கிறிஸ்டி, மருத்துவா்கள் டி.ஜி. திலக், எப்.ஆா். ஜெனிட்டா ஆனந்த், அருணா சங்கரேஸ்வரன், கிரேஷியா தாமஸ், வெங்கட்ராமன், அபிஷ், ஜே. ஜிஷாந்த் மிக்கேல், புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை வேளாங்கண்ணி செல்வி, தெற்கு கள்ளிகுளம் தெட்சணமாடாா் சங்க கல்லூரி பேராசிரியா் பாலமுருகன், சாா்லஸ் பெஸ்கி, அஜித் மிக்கேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.