வழிபாட்டுத் தலங்கள் குறித்து எந்த உத்தரவையும் பிறபிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
மசூதி உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் ஆய்வு செய்வது தொடர்பாக கீழமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் வழக்கில் மறு உத்தரவு வரும்வரை வேறு எந்த நீதிமன்றமும் புதிய வழக்கை பதிவு செய்யக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும். இந்த மனு குறித்து நான்கு வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.