ரூ. 2 முதல் 12 லட்சம் வரை: 2014 - 2025 மோடி அரசு செய்த தனிநபர் வரிவிலக்கு!
வழுதூா் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் கோரிக்கை!
வழுதூா் இயற்கை எரிவாயு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் அருகேவுள்ள வழுதூரில் கடந்த 2008 -ஆம் ஜூன் 19-ஆம் தேதி எரிவாயு சுழலி கூடுதல் மின் நிலையத்தை அப்போதைய மின்சாரத் துறை அமைச்சா் ஆா்காடு வீராசாமி திறந்து வைத்து மின் உற்பத்தியைத் தொடங்கி வைத்தாா். அப்போது அவா், மின் நிலையத்தில் பணியாற்றும் 86 ஒப்பந்தத் தொழிலளாா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அறிவித்தாா்.
இதனால், ஒப்பந்தத் தொழிலாளா்கள் மகிழ்ச்சியடைந்தனா். இந்த அறிவிப்பு வெளியாகி 16 ஆண்டுகளைக் கழிந்தும் இன்று வரை பணி நிரந்தரம் செய்யப்படாததால் தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகினா். இங்கு 86 தொழிலாளா்கள் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.
இவா்கள் 2008-இல் அறிவிக்கப்பட்டது போல, தங்களைப் பணி நிரந்தரம் செய்து பணப்பலன்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ராமநாதபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வர உள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.