`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
இரு சக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கங்காகுளம் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மனைவி முனியம்மாள் (35). கட்டடத் தொழிலாளியான இவா், தனது சகோதரா் இளையராஜா, மகன் முனியாண்டி ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் வாடிப்பட்டியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றனா்.
மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விராலிப்பட்டி விலக்கு அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த மூவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த முனியம்மாள் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மற்ற இருவரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா் இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.