குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
வாசுதேவநல்லூா் அருகே பெண்ணை ஏமாற்றியவா் கைது
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
விஸ்வநாதபேரி அம்மன் கோயில் வடக்குத் தெருவை சோ்ந்த ராமமூா்த்தி மகன் பிரேம்குமாா்(32). விவசாயத் தொழிலாளி. இவா், அப்பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண்ணை திருமணம் செய்துகொள்வததாகக் கூறி கடந்த சில ஆண்டுகளாக நெருங்கி பழகியதில், அந்தப் பெண் கா்ப்பமுற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரை திருமணம் செய்ய பிரேம்குமாா் மறுத்து விட்டாராம். இதுகுறித்து புகாரின் பேரில், புளியங்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.