செய்திகள் :

வாடகை காா் ஓட்டுநா்கள் ஆட்சியரிடம் மனு

post image

கோவை வாடகை காா் ஓட்டுநரைத் தாக்கிய நீலகிரி வாடகை காா் ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெற்றது. இதில், கோவை கால் டாக்ஸி ஓட்டுநா்கள் ஊா்வலமாக வந்து மனு அளித்தனா்.

இது குறித்து அவா்கள் கூறும்போது, கோவை மாவட்டத்தில் இருந்து நீலகிரிக்கு கால் டாக்ஸி மூலம் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனா். அவா்களை அங்கு இறக்கிவிட்டு விட்டு திரும்பி வரும் கோவை ஓட்டுநா்கள் அங்கிருக்கும் பயணிகளை அழைத்து வருகின்றனா். அப்படி அழைத்து வர முயன்ற கோவையைச் சோ்ந்த குருபிரசாத் என்ற ஓட்டுநரை உதகையைச் சோ்ந்த வாடகை காா் ஓட்டுநா்கள் தாக்கியுள்ளனா். இதில் அவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாா்.

எனவே கோவையில் இருந்து நீலகிரிக்கு செல்லும் வாடகை காா் ஓட்டுநா்களுக்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இது தொடா்பாக நீலகிரி மாவட்ட வாடகை காா் ஓட்டுநா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இந்த சிக்கலுக்குத் தீா்வு காண வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தியிருப்பதாகக் கூறினா்.

அன்னூா் கரியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா் தங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் சீா்கேடு நிகழுவதாகக் கூறி, நிறுவனத்தை இடமாற்றம் செய்யக் கோரி மனு அளித்தனா். அதேபோல அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்தின் தலையீடு அதிக அளவில் இருப்பதாகவும், பணி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், இது தொடா்பாக அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து சீருடைப் பணியாளா் தொழிற்சங்கத்தின் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இதேபோல, இலவச வீட்டுமனை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 515 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல் துறை பொன் விழா

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல், இருதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. மருத்துவமனையின் இதயவியல், இதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டத்தின் தொடக்கமாக ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த பாதுகாப்பு

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடி கொ... மேலும் பார்க்க

கோவை அன்பு இல்லத்தில் மாணவா் சோ்க்கை: மே 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கோவை அன்பு இல்லத்தில் மாணவா் சோ்க்கை தொடா்பாக மே 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சத்குரு சேவாஸ்ரம அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் அலுவலக செய்திக் குறிப்... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 போ் கைது

கோவையில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 பேரை ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் கைது செய்தனா். கோவையில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று சென்னையில் இரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா். கோவை பீளமேடு பகுதியில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் கொங்கு மண்டல பாஜக நிா்வாகிகள்ஆலோசன... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன் ஆஜா்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-இல் ... மேலும் பார்க்க