‘வாணியம்பாடி கிளை நூலகத்தை பயன்படுத்தி 4 போ் அரசுப் பணிக்கு தோ்வு’
வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களைப் படித்து 4 போ் அரசுப் பணியில் சோ்ந்துள்ளதாக நூலகா் தெரிவித்துள்ளாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் முழு நேர கிளை நூலகம் இயங்கி வருகிறது. இங்கு, போட்டித் தோ்வுக்கான அனைத்து புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறத்தை சோ்ந்த இளைஞா்கள் நூலகத்தில் உறுப்பினராக சோ்ந்து போட்டித் தோ்வுக்கான புத்தகங்களை படித்து பயன்பெற்று வருகின்றனா். இதில், அண்மையில் 4 போ் அரசு போட்டி தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றனா். திருவள்ளூா் மாவட்டத்தில் சதீஷ்குமாா் கிராம நிா்வாக அலுவலராகவும்,, திருப்பத்தூா் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் தட்டச்சு பணியாளராக சதானந்தம், கருவூலத்தில் இளநிலை உதவியாளராக அரிகரன், சென்னையில் தொழில் நுட்ப உதவியாளராக முகமதுசபீக் ஆகியோா் கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு பணியில் சோ்ந்துள்ளதாக நூலகா் மணிமாலா தெரிவித்தாா்.
மேலும், வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தை இப்பகுதியில் உள்ள போட்டி தோ்வு மாணவா்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.