செய்திகள் :

வானிலை தரவுகளை மீறி புயல் பாதிப்பு: அமைச்சர் சேகர்பாபு

post image

வானிலை தரவுகளை மீறி பென்ஜால் புயலின் பாதிப்பு இருந்ததாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் அப்போது தெரிவித்ததாவது:

வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை  ஆய்வாளர்களின்  புயல் தொடர்பான கருத்துகளை உள்வாங்கி முதல்வர் ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக, கடந்த காலங்களில் சென்னையில் மழை பெய்தாலே 3 நாள்கள் வரை ஸ்தம்பித்த நிலையில், சென்னையில் 130 மி.மீ. மழை பெய்த 12 மணி நேரத்திற்குள்ளாகச் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியது.

பென்ஜால் புயல் ஒரிரு நாள்கள் ஒரே இடத்தில் மையம் கொண்டு நின்றதை வானிலை நிபுணர்கள் கூறும்போது, 50 ஆண்டு காலப் புயல் வரலாற்றில் இதுவே முதல்முறை என்கின்றனர்.

உடனடியாக  கடலூர் மாவட்டத்திற்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எ.வ.வேலு, விழுப்புரம் மாவட்டத்திற்கு பொன்முடி, சிவசங்கர், செந்தில்பாலாஜியும் நிவாரணப் பணிகளுக்கான பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்; கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரிக்கு முத்துசாமி, ராஜேந்திரன் பொறுப்பு அமைச்சர்களாகச் செயலாற்றி வருகிறார்கள்.

இன்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் ரூ. 2000 கோடி நிவாரணம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு, உதவி செய்வதாக அறிவித்ததுடன் அப்படியே நின்றுகொண்டிருக்கும் வேளையில், மாநில அரசு பாதிக்கப்பட்ட கால்நடைகள், வீடுகள், பயிர்கள் போன்றவற்றிற்கு நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணையைப் பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்  படி, 25 ஆம் தேதியிலிருந்து தண்ணீர் படிப்படியாக வெளியேற்றப்பட்டு உள்ளது. முன்னறிவிப்பு கொடுத்து  முதற்கட்டமாக 25ஆம் தேதி 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதே போல் 5 முறை எச்சரிக்கப்பட்டு பின்னரே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இறுதியாக 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீரை முன்னறிவிப்பு செய்துதான் வெளியேற்றினோம். அதனால்தான் எந்த வித உயிர் சேதமும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்திருந்தால் உயிர்சேதம் இன்றி எடுத்த நடவடிக்கைக்காகத் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால், வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசிடமிருந்து நிதியைக் கேட்டு பெற அழுத்தம் தரவேண்டுமே தவிர, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும்.

இதையும் படிக்க: புயலால் பாதிக்கப்பட்டவர்களை பனையூர் வரவழைத்து நிவாரணம் வழங்கிய விஜய்!!

தமிழக அரசைப் பொறுத்தவரை இந்திய வானிலை ஆய்வு மையம், தனியார் ஆய்வாளர்களின் தரவுகளை உள்வாங்கி, துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கும் உடனுக்குடன் அனுப்பிள்ளோம். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் வாயிலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து எடுத்துவந்துள்ளோம்.

பென்ஜால் புயலின் தாக்கத்தை இந்திய வானிலை ஆய்வு மையமே கணிக்க திணறியது. அப்போதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்களை ஒருங்கிணைத்து முதல்வர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

வானிலை தரவுகளை மீறி புயலின் பாதிப்பு இருந்தது. அரசு தயார் நிலையில் இருந்த காரணத்தால்தான் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்று பேசினார்.

லட்சுமி தொடரில் இருந்து விலகிய சஞ்சீவ்! இனி இவர்தான்!

லட்சுமி தொடரில் இருந்து நடிகர் சஞ்சீவ் வெங்கட் விலகியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.'திருமதி செல்வம்' தொடரில் செல்வம் என்ற பாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ் வெங்கட்.இவர்... மேலும் பார்க்க

ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டம்: தொடக்கிவைத்த முதல்வர்!

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,383 கோடி மதிப்பீட்டிலான 79 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக மருத்துவ உபகரணங்கள் வழங்கி, 29 முடிவுற... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

புயல் வெள்ளம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமையும் (டிச.4) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவ... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல்: சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் நிவாரணம்!

ஃபென்ஜால் புயல் நிவாரணப் பணிகளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “ஃபென... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(டிச. 4) தமிழகத்தில் ஓரிரு ... மேலும் பார்க்க

ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர ஃபட்னவீஸ்!

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதற்காக மும்பையில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரினார் பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ்.மகாராஷ்டிரா முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, இன்... மேலும் பார்க்க