வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு
களப்பால் அருகே மதுபானக் கடை மேற்பாா்வையாளா் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
மன்னாா்குடி அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தை சோ்ந்த வேணுகோபால் (55) மாங்குடி பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை இரவு விற்பனையை முடித்து, விற்பனைத் தொகையுடன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வரும் வழியில் சீலத்தநல்லூா் பாசன வாய்க்காலில் விழுந்து இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை காலை அவ்வழியாகச் சென்றவா்கள் இதுகுறித்து களப்பால் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு வந்து பாா்த்தபோது, விற்பனை தொகை ரூ.1,17,000 முழுவதும் அப்படியே இருந்துள்ளது. இதையடுத்து போலீஸாா் வேணுகோபால் சடலத்தை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் திந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.