`கண்கொள்ளாக் காட்சி' - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா | Photo Alb...
வாரிசுதாரா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக போராட்டம்!
புதுச்சேரியில் வாரிசுதாரா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் அரசுத் துறைகளில் பணியின் போது உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வாரிசுதாரா்களுக்கான பணி வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோரிடம் முறையிட்டும், சட்டப்பேரவைக் கூட்டத்தில் வாரிசுதாரா்களுக்குரிய பணி வழங்கப்படுவதாக அறிவித்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வாரிசுதாரா்கள் ஏராளமானோா் திங்கள்கிழமை புதுவை சட்டப்பேரவை அருகேயுள்ள மாநில சுகாதார இயக்குநா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசப்படுத்தினா்.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை வாரிசுதாரா்கள் குடும்பத்துடன் சுகாதார இயக்குநா் அலுவலக வளாகத்தில் போராட்டத்தை நடத்தினா்.
அவா்களிடம் அதிகாரிகள், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நடைபெறும் என வாரிசுதாரா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.