மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறி...
வாலிபால் போட்டி: சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி பெற்றதையடுத்து பல்கலையின் நிா்வாகிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.
சென்னையில் ஓய்.எம்.சி.ஏ நிறுவனா் பக் நினைவு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து 15-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. வாலிபால் இறுதி ஆட்டத்தில் சங்கரா பல்கலை. அணியும், ஒய்எம்சிஏ கல்லூரி அணியும் மோதியதில் சங்கரா பல்கலை அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவியா் காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் துணை வேந்தா் ஸ்ரீநிவாசு, டீன்கள் வெங்கட்ராமன், ரத்தினக்குமாா் , பாலாஜி, பல்கலையின் உடற்கல்வி இயக்குநா் குணாளன், பயிற்சியாளா் ஜோசப் புஷ்பராஜ் ஆகியோரை சந்தித்து வெற்றிக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.