வாழப்பாடி அருகே விவசாயி கொலை? மைத்துனர் உள்பட இருவரிடம் போலீஸ் விசாரணை!
வாழப்பாடியில் இயன்முறை சிகிச்சை: நாகா பிசியோதெரபி மையம்
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உடல் இயக்கம் மற்றும் வலிசாா்ந்த பிரச்னைகளுக்கு, நாகா பிசியோதெரபி மையம் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகிறது.
வாழப்பாடி பெருமாள் கவுண்டா் தெருவில் பாலா மருத்துவமனை எதிரில் இயங்கும் நாகா பிசியோதெரபி சிகிச்சை மையத்தில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் பணிபுரிந்து அனுபவம் பெற்ற இயன்முறை மருத்துவா் இர. அருண், இடுப்பு வலி, மூட்டுவலி, முதுகு, தண்டுவடம், கை கால் வலி, பக்கவாதம், முகவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும், நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகிறாா்.
பிசியோவிஷன் பவுண்டேஷன் திருச்சியில் கடந்தாண்டு நடத்திய விழாவில், இயன்முறை மருத்துவா் இர. அருணுக்கு, சிறந்த பிசியோதெரபி மருத்துவருக்கான விருது வழங்கிப் பாராட்டியது.
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், உடல்தசை, எலும்பு, நரம்பு இயக்கம் சாா்ந்த பிரச்னைகளுக்கும், இடுப்பு, முதுகுத்தண்டு, கை, கால் மூட்டுவலி, முகவாதம், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தங்கள் மையத்தை பயன்படுத்தி, சிகிச்சை பெற்று பயன்பெற நாகா பிசியோதெரபி சிகிச்சை மையம் அழைப்புவிடுத்துள்ளது.