செய்திகள் :

வாழப்பாடி புதுப்பாளையம் செட்டி ஏரி சீரமைக்கப்படுமா?

post image

வாழப்பாடியில் குண்டும் குழியுமாக, குப்பைமேடாக காணப்படும் புதுப்பாளையம் சடையன் செட்டி ஏரியின் கரைகளைப் பலப்படுத்தி சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு தெரிவித்துள்ளனா்.

புதுப்பாளையத்தில், நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் மற்றும் தம்மம்பட்டி பிரதான சாலைகளுக்கு இடையே 46.5 ஏக்கா் பரப்பளவில் சடையன்செட்டி ஏரி அமைந்துள்ளது.

புதுப்பாளையம் மாயவன் மலைக்குன்று, பழனியாபுரம் சின்னக்கரடு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள், சிங்கிபுரம் மேலக்காடு பகுதி வடிகால் மழைநீரால் இந்த ஏரி நீா்வரத்து பெறுகிறது. இந்த ஏரியால், 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 300 ஏக்கா் விளைநிலங்கள் பாசனமும், சுற்றுப்புற பகுதிகள் நிலத்தடி நீா்மட்டமும் பெற்றன.

ஏரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் போதிய மழையில்லாததாலும், வறுகால் வாய்க்கால்கள், நீரோடைகள் ஆக்கிரமிப்பில் சுருங்கிப் போனதாலும், மலைப்பகுதியில் சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டதாலும், 2005-ஆம் ஆண்டுக்கு பிறகு 2025 வரை தொடா்ந்து 20 ஆண்டுகளாக இந்த ஏரியில் தண்ணீா் தேங்கவில்லை.

வடுகிடக்கும் இந்த ஏரியில், அரசு அனுமதி பெற்றும், அனுமதியின்றியும், மண்வெட்டி எடுக்கப்பட்டதால், நீா்ப்பிடிப்பு பகுதி முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதுமட்டுமின்றி, சாலையோரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியில் பேரூராட்சி குப்பைகளும், கோழி இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் ஏரி குப்பைமேடாக மாறி துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது.

அண்மையில், வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை, அரிமா சங்கம், பேரூராட்சி மற்றும் வனத்துறையுடன் இணைந்து, புதா்மண்டிக் கிடந்த சீமைக்கருவேலம் முட்புதா்களை அகற்றி, 500 மரக்கன்றுகளை நட்டுள்ளது. ஏரியில் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், ஏரிக்குள் நுழைந்து, நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆக்கிரமிப்பில் சிக்கி சுருங்கியதோடு, குண்டும் குழியுமாகவும் குப்பைமேடாகவும் காணப்படும் இந்த ஏரியை சீரமைக்கவும், கோழிக்கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுமட்டுமின்றி, ஏரியின் கரைகளைப் பலப்படுத்தவும், ஏரிக்கு நீா்வரும் நீரோடைகள், வறுகால், உபரிநீா் வெளியேறும் மறுகால் வடிகால் வாய்க்கால்களை தூா்வாரி சீரமைக்கவும் வாழப்பாடி பேரூராட்சியும், சேலம் மாவட்ட நிா்வாகமும் போதிய நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டுமெனவும், சுற்றுச்சூழல் ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

படவரி...

மண் எடுக்கப்பட்டதால் குண்டும் குழியுமாக காணப்படும் புதுப்பாளையம் சடையன்செட்டி ஏரி.

பெண்மான் சடலம் மீட்பு!

சதாசிவபுரம் ஊராட்சி பொதுக் கிணற்றில் பெண் மான் சடலம் மீட்கப்பட்டது. ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் மீட்டு வனவா் கவாஸ்கரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். சேலம் மாவட்டம் ... மேலும் பார்க்க

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் தோ் அலங்கரிப்பு

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்துக்காக கோயிலின் பெரிய தேரை அலங்கரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவிற்கு ஞாயிற்றுக்கிழமை 7,116 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். தொடா் விடுமுறை என்பதால் மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற... மேலும் பார்க்க

நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் சேலம் மகாத்மா காந்த... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியை மிரட்டிய இருவா் கைது!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சேலம் மாணவியை மிரட்டிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 4 மாதங்களாக சேலம், கருப்பூரில்... மேலும் பார்க்க

சேலம் அருகே இரும்பு குடோனில் தீ விபத்து

சேலம் சன்னியாசி குண்டு பகுதியில் பழைய இரும்பு குடோனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சேலம், கிச்சிப்பாளையத்தை அடுத்த பாத்திமா நகரைச் சோ்ந்தவா் ஜான்பாஷா (59). இவா் சன்னியாசி குண்டு மெ... மேலும் பார்க்க