செய்திகள் :

விஜயகாந்த் நினைவு நாள்: பேரணிக்கு அனுமதி மறுப்பு!

post image

விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி பேரணிக்கு அனுமதி கோரி காவல்துறையினருடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதல் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும் விஜயகாந்தின் நினைவு நாளன்று மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு அமைதிப் பேரணி நடத்த அனுமதி வேண்டும் என்று தமிழக அரசிடம் தேமுதிக கோரிக்கை வைத்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பகுதி என்பதால் போக்குவரத்து பிரச்னை ஏற்படும் எனக்கூறி காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், அவர்களுடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பேரணிக்கு கடந்த டிச. 5 ஆம் தேதியே கோரிக்கை விடுத்த நிலையில் கடைசி நேரத்தில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள தேமுதிக துணைச் செயலர் பார்த்தசாரதி, பேரணிக்கு முதல்வர் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலஸ்தீன மாணவி சுட்டுக்கொலை!

மேற்கு கரைப்பகுதியின் ஜெனின் நகரத்தில் பாலஸ்தீன மாணவி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜெனின் நகரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வரும் போராளி குழுக்களுக்கு எதிராக பாலஸ்தீன அதிகாத்துவத்தின் பாதுகாப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின்!

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைந்த முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தூத்துக்குடியில் ரூ 32. 5 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா திறப்பு விழா ஞாயிற்... மேலும் பார்க்க

தைலாபுரத்தில் சமாதான பேச்சு! ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு

விழுப்புரம்: பாமக இளைஞரணித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து, தைலாபுரம் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சம... மேலும் பார்க்க

2 மாநிலங்களைக் கடந்த பெண் புலியைப் பிடிப்பதில் சிரமம்?

ஒடிசா மாநிலத்திலிருந்து தப்பித்த பெண் புலியைப் பிடிக்க வனத்துறை காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒடிசாவின் சிமிலிப்பால் வனப்பகுதியிலிருந்து தப்பித்து மேற்கு வங்கத்தின் பாங்குரா வனப்பகுதியினுள் நுழ... மேலும் பார்க்க

ரோஜா - 2 தொடர் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

ரோஜா தொடர் இரண்டாம் பாகத்தின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர், கடந்த 2022 டிசம்பரில் நிறைவு பெற்றது. ரோஜா தொ... மேலும் பார்க்க

3 பெண் மாவோயிஸ்டுகள் கைது!

ஒடிசா மாநிலம் மால்கான்கிரி மாவட்டத்தில் 3 பெண் மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மால்கான்கிரி மாவட்டத்தின் குதன்பேடா கிராமத்தில் பதுங்கியிருந்த 3 பேரையும் நேற்று (டிச.28) சித்திரக்கொண்டா காவல்துறை... மேலும் பார்க்க