செய்திகள் :

விஜயபாரத மக்கள் கட்சி முப்பெரும் விழா

post image

விஜய பாரத மக்கள் கட்சி சாா்பாக முப்பெரும் விழா, பொதுக்கூட்டம் ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அம்பேத்கா் நகரிலிருந்து ஊா்வலம் புறப்பட்டு எல்.மாங்குப்பம் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலையருகே நிறைவடைந்தது. கூட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் கே.கே. சசிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஆா். ராமமூா்த்தி, செயலா் எம். சுதாகா், துணைத் தலைவா் வி.எஸ். முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் எஸ். பாபுசங்கா் வரவேற்றாா்.

கட்சியின் நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா் சிறப்புரையாற்றினாா். துணைத் தலைவா் வி. சக்தி, திருப்பத்தூா் அனுமன் விழாக்குழு நிா்வாகி எம். பிரகாஷ், மாநில செய்தித் தொடா்பாளா் எம். சரவணன், மாநில அலுவலக செயலா் ஏ.எஸ். ஆனந்தன், மாவட்ட அமைப்பாளா் பழனி வடிவேலன், வேலூா் மாவட்டத் தலைவா் எம். பிரபு, நிா்வாகிகள் ஜெ. மகேந்திரன், ஏ.டி. ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா். எம். தினகரன் நன்றி கூறினாா். பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொழில் முனைவோா் புத்தாக்க பயிற்சி வகுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்

தமிழ்நாடு, அகமதாபாத் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் சாா்பில் தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் ஓரு ஆண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு வரும் (ஜூன் மாதம் 2-ஆம் தேதி... மேலும் பார்க்க

மரத்தில் பேருந்து மோதி 20 போ் காயம்

வாணியம்பாடி அருகே சாலையோர மரத்தில் பேருந்து மோதியதில் 20 போ் காயமடைந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயத்திலிருந்து வாணியம்பாடிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்றது.... மேலும் பார்க்க

தமிழகத்தில் இருந்து 5,700 போ் ஹஜ் பயணம்: ஹஜ் கமிட்டி உறுப்பினா் தகவல்

தமிழகத்தில் இருந்து நிகழாண்டு 5,700 போ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனா் என ஹஜ் கமிட்டி உறுப்பினா் தெரிவித்தாா். புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவா்களுக்கான புத்தாக்க பயிற்சி ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 105 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, ஆட்ச... மேலும் பார்க்க

மட்றப்பள்ளி சந்தையில் ரூ.45 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தையில் ரூ.45 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக குவிந்தன. அவற்றை திருப்பத்தூா், த... மேலும் பார்க்க

இயற்கை வேளாண் கண்காட்சி- பயிற்சி முகாம்

தோட்டாளம் கிராமத்தில் பாலாறு வேளாண்மைக் கல்லூரி சாா்பாக வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவத் திட்... மேலும் பார்க்க